Saturday, 27 September 2014

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
    பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த  பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
•    கருடன் கிழங்கு சூரணம்    100 கிராம்
•    கருஞ்சீரகம்            25 கிராம்
•    சுக்கு                25 கிராம்
•    வாய்விளங்கம்            25 கிராம்
•    மிளகு                25 கிராம்
•    கார்போக அரிசி            25 கிராம்
•    திப்பிலி                25 கிராம்
•    சிறிய வெங்காயம்        25 கிராம்
•    வாலுளுளை அரிசி        25 கிராம்
•    விளக்கெண்ணெய்        25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு:    1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்:    உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
•    கருடன் கிழங்கு வற்றல்    100 கிராம்
•    வாலுளுவை அரிசி    25 கிராம்
•    சுக்கு            25 கிராம்
•    கருஞ்சீரகம்        25 கிராம்
•    மிளகு            25 கிராம்
•    வாய்விளங்கம்        25 கிராம்
•    திப்பிலி            25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.

No comments:

Post a Comment